பதிவு செய்த நாள்
18
நவ
2013
10:11
பேரூர்: மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில், திருக்கார்த்திகை தீப வழிபாடு நேற்று வெகுசிறப்பாக நடந்தது. நேற்று திருக்கார்த்திகை தீப வழிபாடு என்பதால், நேற்று காலை முதலே பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டனர். நேற்று மாலை 6.00 மணிக்கு, ஆதி மூலஸ்தானத்தில், தீபம் ஏற்றி தீப வழிபாடு துவங்கியது. பின், உட்பிரகாரத்தில் விநாயகர், பஞ்சமுக விநாயகர், பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வரதராஜப் பெருமாள் சன்னதி, நவகிரக சன்னதி, கோபுரம் ஆகியவற்றில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு தீபஸ்தம்பத்தில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பானை கொளுத்தப்பட்டது.