பதிவு செய்த நாள்
18
நவ
2013
10:11
அவிநாசி: அவிநாசி வட்டார கோவில்களில் நேற்று கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கார்த்திகை தீபத்திருநாளான நேற்று, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் விசேஷ பூஜை, வழிபாடுகள் நடந்தன. மாலை அவிநாசியப்பர், கருணாம்பிகை அம்மன், சுப்பிரமணியர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தன. மயில் வாகனத்தில் சுப்ரமணியரும், ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில், தீப ஸ்தம்பம் முன் எழுந்தருளினர். சிறப்பு வேத பாராயணத்துக்குபின், அலங்கார தீபாராதனை மற்றும் பூஜைகள், சிவக்குமார சிவாச்சாரியார் தலைமையில் நடந்தன. கோவில் முன்புள்ள 100 அடி உயர தீப ஸ்தம்பத்தில், திருநாவுக்கரசு சிவாச்சாரியார், திருக்கோடி தீபத்தை ஏற்றினர். திரண்டிருந்த பக்தர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டனர். சுவாமி திருவீதியுலா காட்சி நடந்தது. நான்கு ரத வீதிகளிலுள்ள காசி விநாயகர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அங் காள பரமேஸ்வரி கோவில், மாரியம்மன் கோவில், செல் லாண்டியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக அவிநாசி வட்டாரத்திலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.