காஞ்சிபுரம்: பாலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முடவன் முழுக்கு சிவபூஜை நடைபெறும். காமாட்சியம்மன், மணலால் லிங்கத்தைப் பிடித்து கடும் தவம் புரிந்தார் என்பது ஐதீகம். அதன் நினைவாக காஞ்சிபுரத்தில் முடவன் முழுக்கு சிவபூஜை திருவிழா திருஞானசம்பந்தர் இறைப்பணி மற்றும் உழவாரப் பணிக் குழு சார்பில் நடத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மேல்பாலாற்றில் தியாகராஜ அலங்காரத்தில் சிவபெருமானும், கமலாம்பிகை அலங்காரத்தில் பார்வதியும் பாலாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.