மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் 2014ஆம் ஆண்டு காலண்டர் வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2013 01:11
மதுரை: மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் சார்பில் வரும் 2014 ஆம் ஆண்டுக்கான வண்ணக் காலண்டரை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். இதுகுறித்து தி.கண்ணன் கூறியதாவது: அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் காலண்டரில் உற்சவர் திருவுருவப் படங்கள் முற்றிலும் புதிய அலங்காரங்களில் இடம்பெற்றுள்ளன.மீனாட்சியம்மன் முத்துச்சடை அலங்காரம், அருள்மிகு வெள்ளியம்பல நடராசர் (கால் மாறிய திருக்கோலம்), அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோலம், அருள்மிகு சந்திரசேகர், அருள்மிகு சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம், அருள்மிகு பிச்சாண்டவர், சுந்தரேசுவரர் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் திருக்கோலம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மொத்தம் 13 தாள்களில் உள்ள காலண்டரின் விலை தலா ரூ.100. கோயில் வளாகத்தில் உள்ள தரிசன கட்டண சீட்டு வழங்குமிடம், பிரசாத ஸ்டால்களில் கிடைக்கும்.