கும்பகோணம்: மகாமக குளத்தில் 20 வகையான புண்ணிய தீர்த்த கிணறுகள் அமைந்துள்ளன. மேலும் இக்குளத்தைச் சுற்றிலும் 16 வகையான சிவலிங்கங்கள் அமைந்துள்ளதால் இவற்றை சோடசமகாலிங்க சுவாமிகள் என அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்புகள் பெற்ற இக்குளத்தினை பௌர்ணமி தினத்தன்று தீர்த்த வலம் வந்தால் சாந்தம் மிளிர்ந்து, அமைதி ஒளிரவும், பகைமை அகன்று, சுபிட்சம் மலரும் என்பதால் கும்பகோணம் சேக்கிழார் மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி கார்த்திகை மாத பௌர்ணமி தினமான ஞாயிற்றுக்கிழமை தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.