பதிவு செய்த நாள்
20
நவ
2013
12:11
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரகக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். திருக்கோயில் மலைப்பகுதியிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் அப்பகுதியில் வசிப்போரும், சுற்றுலா வருவோரும், பக்தர்களும் தேவையற்ற கழிவுகளை வீசியெறிவதன் மூலம் அசுத்தப்படுத்தி வருகின்றனர். இதனால், திருக்கோயிலின் மலைப்பகுதி, திருக்கோயில் வளாகம், மலையைச் சுற்றிய கிரிவலப் பாதைகளில் தேவையற்ற பிளாஷ்டிக் பொருள்கள், காய்கறிக் கழிவுகள், மனிதக் கழிவுகள், எச்சில் இலைகள், உணவுப் பொட்டலங்கள் என குப்பைகள் பெருகி அசுத்தநிலையை ஏற்படுத்தியுள்ளன. ஆகவே அசுத்தப்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்பிரிவு 133 கு.வி.மு.ச. மற்றும் 290 இ.த.ச. பிரிவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.