பதிவு செய்த நாள்
20
நவ
2013
05:11
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே உத்திரகங்கையில் சாய்பாவின் பக்தை கடந்த 10 ஆண்டுகளாக பிறந்த மேனியில் அருளாசி வழங்கி வருகிறார். திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறை சாலையில் உள்ள பூந்தோட்டம் அருகே உத்தரகங்கையைச் சேர்ந்தவர் கிட்டு, ரயில்வே ஊழியர் இவரின் மூன்றாவது மகள் தேவகி, தஞ்சை அருகில் திருமணம் நடந்தது. இல்லறத்தை துறந்து, இளம் வயில் சாய்பாபாவின் தீவிர பக்தையாக விளங்கினார். பின்னாளில் இவர் போக்கில் மாற்றம் காணப்பட்டதால் அனைவரும் இவரை பைத்தியம் என்று அழைத்தனர். ஓரே ஆடையில் பலகாலம் பாபா நாமத்தை உச்சரித்த வண்ணம் வீதியில் திரிந்தார். அவரை அனைவரும் மனநிலை பாதித்தவர் என கருதி கற்களை வீசினர்.போதிய கல்வி அறிவு இல்லாத நிலையில் என்னை துன்புறுத் தாதீர்கள் பாபாவை வணங்குங்கள் என கூறினார். இவர் வர்த்தையை கேட்டு சென்றவர்கள் பல்வேறு வெற்றியை கிட்டினர். அதன் பின் இவரிடம் ஏதோ சக்தி உள்ளது என பலரும் உணர்ந்தனர். நன்னிலத்தில் தீயணைப்புத்துறையில் பணியாற்றி ஒருவரை பணியை விட்டு வரக்கூறி சீரடி சாய்பாபாவிற்கு கோவில் கட்டபணித்தார். அதன் படி கோவில் கட்டப்பட்டுள்ளது.
தற்போது வீட்டில் வாசலில் மழை, வெயில், குளிர் எதையும்பொறுட்படுத் தாமல் உடலில் ஆடையில்லாமல் தனது தலையில் உள்ள ஜாடா முடியை விரித்த கோலத்தில் சித்தர் ஆச்சி சின்னக்குஞ்சம்மாள் என அழைக்கப்பட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கிறார். அவர் அமர்ந்து ஆசி வழங்கும் இடத்தில் எப்போதும் தீ மூட்டிய நிலையில் மண் சட்டி ஒன்றும் அருகில் இரு நாய்கள் மற்றும் கால்நடைகள் சுற்றி வருகிறது. அந்த இடத்திற்கு செல்லும் அனைவரும் ஏதோ தெய்வீககுணம் கொண்டவர்களாக வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக குளிக்காமல், பல் துளக்காமல், ஆடையில்லாமல் அமர்ந்துள்ள இடத்தில் எந்தவித துர்நாற்றமும் வீசாமல் இருப்பது வியக்க தக்க வகையில் உள்ளது. மேலும் அவரிடம் ஆசி பெற செல்பவர்களை ஐயா, ஆச்சி என்று செல்லமாக அழைத்து வீபூதி பூசியப்பின், வெறும்வயிற்றுடன் செல்லாதீர்கள் பாபா ஆலயத்தில் உணவு அருந்தி விட்டு செல்லுங்கள் என கூறி அனுப்புகிறார். இவரைக்காண பல்வேறுப்பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.