பதிவு செய்த நாள்
22
நவ
2013
10:11
பவானி, தேவபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில், 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. பவானி, தேவபுரம் பகுதியில் ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீஐயப்பன் கோவில்கள் அமைக்கப்பட்டு, கடந்த, 2007ம் ஆண்டு மஹா கும்பாபிகேம் நடந்தது. நேற்று காலை, 7.40 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நவகிரக ஹோமம், ஸ்ரீதன்வந்திரி ஹோமம், மகாசுதர்சன ஹோமம், லட்சுமி குபேர பூஜை நடந்தது. பின், இக்கோவில் மூலவர்களான ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீஐயப்பன் சுவாமிகளுக்கு, 28 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து, மகா தீபாராதனை நடந்தது. மாலை, 6.30 மணிக்கு விசேஷ அலங்காரத்துடன் ஸ்ரீதர்ம சாஸ்தா, ஸ்ரீஐயப்பன் சுவாமிகள் சிறப்பு அலங்கார, தீபாராதனை நடந்தது. ஸ்ரீஐயப்பன் கோவில் குருசாமி ஜெயராமன் மற்றும் அக்கி ராஜா, பவானி தி.மு.க., நகர செயலாளர் நாகராசன், தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.