தோவாளை ஒன்றிய விசுவ இந்து பரிஷத் சார்பில் அழகியபாண்டியபுரத்திலுள்ள திருவேங்கடதப்பர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது. இதற்கு தோவாளை ஒன்றிய விசுவ இந்து பரிஷத் தலைவர் துவரை கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காளியப்பன் உழவாரப்பணியை தொடங்கிவைத்தார். ஈசாந்திமங்கலம் கிளை தலைவர் ராம்குமார், குறத்தியறை கிளை தலைவர் சிவசுப்பிரமணி, மேல்கரை துணைத்தலைவர் நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.