பதிவு செய்த நாள்
22
நவ
2013
12:11
கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் சங்கரநாயுடு வீதியில் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, லட்சுமி நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கடஸ்தாபனம், முதல் கால யாக பூஜை, திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. நேற்று 2–வது கால யாக பூஜை, திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை 3–ம் கால யாக பூஜை, விஷேச சந்தி, திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு 4–வது கால யாக பூஜை, நாடி சந்தானமும், 8.30 மணிக்கு திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடந்தது. அதையடுத்து கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.