பதிவு செய்த நாள்
23
நவ
2013
10:11
ஸ்ரீபெரும்புதுார்:குண்ணம் கிராமத்தில், திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீகாலகண்டேஸ்வரர் கோவிலிலும், நாவலுார் விஜயகணபதி கோவிலிலும், நவ 22 கும்பாபிஷேகம் நடந்தது. சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள குண்ணம் கிராமத்தில், காலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இந்த கோவிலை புதுப்பிக்கும் பணிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்றன.பணிகள் முடிந்த நிலையில், கடந்த, 20ம் தேதி, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. நவ 22 முன்தினம், இரண்டாம் கால பூஜையுடன், மகா ஹோமம் நடந்தது. நவ 22 அதிகாலை, கோவில் விமானத்தில் கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.நாவலுார்: நாவலுார் விஜயகணபதி கோவிலில், நவ 22 கும்பாபிஷேகம் நடந்தது.கேளம்பாக்கம் அடுத்த, நாவலுாரில் விஜயகணபதி கோவில் புதியதாக கட்டப்பட்டது. இக்கோவிலில், நவ 21 காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் விழாவையொட்டி கணபதிஹோமம், நவகிரகஹோமம், நடத்தப்பட்டு, கோவில் விமானத்தில் கலசநீர் ஊற்றினர்.