செம்பாக்கம்:செம்பாக்கம் பைரவர் கோவிலில், பைரவர் அஷ்டமி விழா, நவ 23 துவங்கியது.திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில், பைரவருக்கு தனி கோவில் உள்ளது. இக்கோவிலில், மூன்று நாள் பெருவிழாவான பைரவர் அஷ்டமி, நவ 23 துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி, சிறப்பு வேள்வி லட்சார்ச்சனை சுவாமி உலா நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை, கிராம மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து உள்ளனர்.