பதிவு செய்த நாள்
23
நவ
2013
10:11
செஞ்சி:செவலபுரை திரவுபதியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி தாலுகா செவலபுரையில் பழமையான தமிழகத்தின் மூன்றாவது திரவுபதியம்மன் கோவில் உள்ளது. 75 ஆண்டுகளுக்கு பிறகு நவ 22 இக்கோவிலின் ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு 20ம் தேதி மாலை 6 மணிக்கு யாகசாலை பிரவேசமும், வேத பிரபந்தம், அக்னி பிரதிஷ்டையும், சாற்று முறையும், 21ம் தேதி காலை 8.30 மணிக்கு திருவாதாரனம், யுக்த ஹோமங்கள், அஷ்டபந்தன சமர்ப்பனம் நடந்தது. நவ 22 காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், யாகசாலை திருவாராதனம், ஹோமங்கள் நடந்தன. 6 மணிக்கு மகா பூர்ணாஹதியும், 6.30 மணிக்கு கடம் புறப்பாடும், 7 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.பகல் 2 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலாவும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், துணை தலைவர் ரமேஷ் மற்றும் செவலபுரை, ராமகிருஷ்ணாபுரம், தாதிகுளம், தாதங்குப்பம், சிறுவாடி, சித்தாத்தூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பூஜைகளை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த வாசுதேவன் பட்டாச்சாரி, öŒவலபுரை ராமசாமி, தேவராஜ் பட்டாச்சாரியார்கள் உட்பட 16 பட்டாச்சாரியார்கள் செய்தனர்.