விக்கிரமசிங்கபுரம்: மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயிலில் கும்ப பூஜை நடந்தது.மகாதேவ அஷ்டமி தினமான நேற்று பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயிலில் காலை 7 மணிக்கு 108 விசேஷ திரவியங்கள் வைத்து சங்குபூஜை, கும்ப பூஜை, ஹோமம், 10 மணிக்கு சுவாமி - அம்பாளுக்கு சங்காபிஷேகம், கும்பாபிஷேகம் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மகேஷ்வரபூஜை, தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், இரவு 8 மணிக்கு பைரவருக்கு வடைமாலை சாத்தி சிறப்பு பூஜை நடந்தது.