ஸ்ரீவில்லிபுத்துார்: ஜன. 29-–: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ர சயனர் கோயில் ராஜகோபுரம்,விமானங்களை புனரமைத்து திருப்பணிகள் செய்வதற்கான பாலாலய பூஜைகள் நேற்று நடந்தது.
இக்கோயிலில் வடபத்ர சயனர் சன்னதி ராஜகோபுரம், விமானம், துணை சன்னதிகளான ஆண்டாள் அவதார சன்னதி, சக்கரத்தாழ்வார், பெரியாழ்வர், கூரத்தாழ்வார் சன்னதிகளின் விமானங்களை புணரமைத்து திருப்பணிகள் செய்வதற்கான பூஜைகள், ஜன 26ல் துவங்கியது.
முக்கிய நிகழ்வான பாலாலய யாகசாலை பூஜைகள் நேற்று காலை 7:00 மணி முதல் துவங்கியது.
யாகசாலை பூஜைகள் பாலாலய பூஜைகள் முடிந்த பின்னர் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, பெரியாழ்வார், வடபத்ரசயனர் சன்னதியில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோயில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். இதனையடுத்து விரைவில் திருப்பணிகள் துவங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.