திருவாடானை கோயிலில் மக்கள் கூட்டம் முகூர்த்த நாளில் போக்குவரத்து நெரிசல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2026 12:01
திருவாடானை: முகூர்த்த நாளில் திருவாடானை கோயில் முன்பு குவிந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவாடானை சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. தை மாதம் பிறந்த பிறகு வந்த முக்கிய முகூர்த்த நாள் என்பதால் நேற்று திருமண வீட்டார்கள் குவிந்தனர். 16 ஜோடிகளுக்கு அந்தந்த குடும்ப வழக்கப்படி வேத மந்திரங்கள் முழங்க, கெட்டிமேளத்துடன் திரு மணங்கள் நடந்தது.
ஒரே நேரத்தில் 16 திரு மணங்கள் நடந்ததால் மணமகன், மணமகள் வீட்டார் கொண்டு வந்த கார்கள், வேன்கள் மற்றும் டூவீலர்கள் என வாகனங்கள் கோயில் முன் வரிசையில் நின்றன.
மேலும் கோயிலை சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் பிரதான சாலைகளின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்க பட்டது.