குற்றாலமலை சாரலிலுள்ள தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மன்னர் அதிவீரராம பாண்டியன். இவர் தென்காசியில், காசி விஸ்வநாதருக்கும், உலகாம்பிகைக்கும் கோயில் எழுப்பியவர். இவர் எழுதிய நூல் நைடதம். நளனின் கதை இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. நைடதம் புலவர்க்கு ஒளடதம் என்று இந்த நூலைப் புகழ்வர். புலவர்களுக்கெல்லாம் மருந்து போனறதாம் இந்த நூல். அதிவீரராம பாண்டியனை தமிழ் வளர்த்த தென்னவன் என்பர். இந்த நூலைப் பற்றி விமர்சனமும் அக்காலத்தில் எழுந்தது. அதிவீரராமபாண்டியனின் அண்ணியார் இந்நூலில் குறை இருப்பதாக குற்றம் சாட்டினார். சென்று தேய்ந்து இறுதல், நாய் விரைந்தோடி இளைத்தாற் போன்ற தன்மையுடையது என்றெல்லாம் விமர்சித்தார். இந்த நூலில் 1172 பாடல்கள் உள்ளன.