ஆலங்குடி: கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் தினமும் காலை, மாலையில் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் மாலையில் 18 படிபூஜை நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்குகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.