சோழவந்தான்: தென்கரை சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயிலில், டிச.,7ல், வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆறாட்டு விழா நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு இவ்விழாவும், இதைதொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது, டிச.,20 மாலை உலகநன்மைக்காக திருவிளக்குபூஜை, டிச.,26 காலை 10.30 மணிக்கு மண்டல பூஜை, அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் செய்துள்ளது.