வீரபாண்டியன்பட்டணத்தில் புனித சவேரியார் புதிய ஆலய திறப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2013 11:12
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டணத்தில் ரூ. 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புனித சவேரியார் புதிய ஆலயத்தை ஆயர் இவான் அம்புரோஸ் திறந்து வைத்தார்.வீரபாண்டியன்பட்டணம் கடற்கரையில் ரூ. 40 லட்சம் செலவில் புதியதாக புனித சவேரியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தை ஆயர் இவான் அம்புரோஸ் அர்ச்சித்து திருப்பலி செய்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மணவை மறைவட்ட முதன்மை குரு இருதயராஜ் பர்னாந்து, பங்குத்தந்தைகள் கொம்புத்துறை விக்டர் லோபோ, வெள்ளப்பட்டி பிரைட் மச்சாது, ஜீவா நகர் கிராசிஸ், முன்னாள் உதவி பங்குத்தந்தை அமலன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வீரபாண்டியன் பட்டணம் பங்குத்தந்தைகள் ஜோசப், பீட்டர்பாஸ்டின் மற்றும் துறைமுக கமிட்டியினர்கள் செய்திருந்தனர்.