தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கருவறையில் உள்ள பிரமாண்ட புற்றுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது. இரவு உற்சவர் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டி சிறப்பு ஆராதனைகள் செய்து பூஜைகள் செய்து மகாதீபாராதனை நடந்தது.