பதிவு செய்த நாள்
04
டிச
2013
10:12
திருக்கோவிலூர் :திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனத்தில் ஞானானந்தகிரி சுவாமிகளின் 40வது ஆராதனை நாளை துவங்குகிறது.திருக்கோவிலூர் அடுத்த தபோவனத்தில் ஞானானந்தகிரி சுவாமிகளின் 40 வது ஆராதனை விழா நாளை ஆரம்பமாகிறது. 15 நாட்கள் நடக்கும் விழாவின் முதல் நாள் காலை 6 மணிக்கு மூர்த்தி வழிபாடு, கணபதி ஹோமம், பாதபூஜை நடக்கிறது மாலை 6.30 மணிக்கு பாலு சுவாமிகளின் குரு அருள் நிகழ்ச்சி, அடுத்து சென்னை ஸ்ரீமதி புஷ்பா ஆனந்த் பஜனை நடக்கிறது.ஆராதனை தினமான வரும் 19ம் தேதி வரை தினசரி பாத பூஜைகளுடன் மகாகணபதி ஹோமம், மகா ருத்ர ஹோமம், பகவதி சேவை, லட்சார்ச்சனை, முருகன் காவடி, சதுர்வேத பாராயணம், சங்கர பாஷ்ய பாராயணம், அகண்டதாரா நாம ஜபம் நடக்கிறது.12ம் தேதி முதல் 18ம் தேதி வரை தினசரி மாலை 3 மணிமுதல் 5 மணி வரையும், இரவு 7.30 மணி முதல் 9.30 மணிவரை பரனூர் கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடக்கிறது.ஆராதனை தினமான 19ம் தேதி காலை 5.30 மணிக்கு விசேஷ பாதபூஜை, லட்சார்த்தனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜை, 10.15 மணிக்கு ஆராதனை, தீர்த்தநாராயண பூஜை, இரவு 7.30 மணிக்கு இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சுப்புராமன் மற்றும் தபோவன நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.