சபரிமலையில் பொருட்கள் கொண்டு வர ரோப்கார் அமைக்கும் திட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2013 02:12
சபரிமலை: சபரிமலையில் பொருட்கள் கொண்டு வருவதற்காக ரோப்கார் அமைக்கும் திட்டம் தேவசம்போர்டின் தீவிர பரிசீலனையில் உள்ளது. வரும் 19-ம் தேதி சன்னிதானத்தில் நடைபெறும் உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவெடுக்கப்படுகிறது. பம்பையிலிருந்து சன்னிதானத்துக்கு தேவையான பொருட்கள் முதலில் கழுதைகள் மூலம் கொண்டுவரப்பட்டது. இது சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தியதை தொடர்நது மனிதர்கள் தலைச்சுமடு மூலம் கொண்டு வந்தனர். இதற்கு செலவு அதிகமானதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட நேரத்தில் பொருட்கள் வந்து சேருவதில் சிக்கல் இருந்தது. இதை தொடர்ந்து நடை அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த டிராக்டர்கள் சீசனிலும் இயக்கப்பட்டது. சுவாமி ஐயப்பன் ரோடு கான்கிரீட் போட்டு சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து டிராக்டர்கள் சுலபமாக வந்து செல்கிறது. எனினும் பக்தர்கள் கூட்டத்துக்கிடையில் டிராக்டர் ஓடுவதால் விபத்துக்கள் வாய்ப்பு இருந்து வருகிறது. எனனே பொருட்களை மேலே கொண்டு வருவதற்கு ரோப்கார் அமைப்பதுதான் சிறந்த வழி என்ற முடிவுக்கு தேவசம்போர்டு வந்துள்ளது. பம்பையில் தொடங்கும் இந்த ரோப்வே சன்னிதானத்தில் பிரசாத மண்டபத்தின் பின்புறம் வந்து சேரும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சர்வே பணிகள் நிறைவு பெற்று விட்டது. இரண்டு தனியார் கம்öனிகள் இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளது. சபரிமலை மாஸ்டர் பிளானை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்ட கமிட்டி தலைவர் ஜெயக்குமார் தலைமையில் 19-ம் தேதி சன்னிதானத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் இந்த திட்டத்துக்கு அனுமதி கிடைத்தால் அடுத்த சீசனுக்குள் அதை செயல்படுத்த தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மலைஏற முடியாக பக்தர்களை டோளியில் கொண்டுவருவதற்கு பதிலாக ரோப்கார் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.