Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் பொருட்கள் கொண்டு வர ... சபரிமலையில் பொருட்கள் கொண்டு வர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிளாஸ்டிக்கை தவிர்த்து இருமுடி கட்ட பக்தர்களுக்கு தேவசம்போர்டு வேண்டுகோள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2013
01:12

சபரிமலை: பிளாஸ்டிக்கை தவிர்த்து இருமுடி கட்டு கட்டி வருவதால் சபரிமலையில் சுற்றுச்சூழலும் புனிதமும் பாதுகாக்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியாகும். எனினும் கோயிலுக்கு வரும் லட்சோபலட்சம் பக்தர்களை கருத்தில் கொண்டு சில விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாள் தோறும் பெருகி வரும் பிளாஸ்டிக் குப்பைகள் சபரிமலை சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் முடிந்த அளவு பக்தர்கள் இருமுடி கட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் வரவேண்டும் என்று தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக அவல், பொரி, கற்கண்டு, முந்திரிபழம், மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு வராமல் இலை அல்லது பேப்பரில் பேக்கிங் செய்து கொண்டு வரலாம் என்றும், பக்தர்கள் தேவையில்லாத பொருட்களை சபரிமலையில் வீசி எறிவதற்கு பதிலாக ஊருக்கே திரும்பி கொண்டு செல்லலாம் என்றும் தேவசம்போர்டு ஆலோசனை தெரிவித்துள்ளது.

பக்தர்கள் அரிசியில் அன்னதானம்: பக்தர்கள் கொண்டு வரும் அரிசியை ஆங்காங்கே கொட்டுவதை தவிர்க்க வேண்டும். தற்போது அரிசி காணிக்கை என்று எழுதப்பட்டுள்ள இடத்தில் அரிசி வாங்கப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் அரிசியை தரம் பிரித்து வழங்க வேண்டும். கறுப்பு, வெள்ளை, பச்சையரிசி என தரம் பிரித்து வாங்கப்படுகிறது. இந்த அரிசியை தேவசம்போர்டு அன்னதானத்துக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் அரிசியின் மூலம் மூன்று நேரமும் சிறப்பாக அன்னதானம் நடத்த முடியும் என்று தேவசம்போர்டு கருதுகிறது. பக்தர்களுக்கு இது புண்ணியமாக அமையும் என்பதால் அரிசியை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar