திருபுவனை: திருபுவனை பழண்டி மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு இரண்டாம் கட்ட தவனைத் தொகை 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.திருபுவனை பழண்டி மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு, இந்து சமயஅறநிலையத் துறை மூலம் 42 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் முதற்கட்ட தவணையாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தவணையான ரூ.3 லட்சம் ரூபா#க்கான கா@சாலையை, கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பிப்டிக் சேர்மன் அங்காளன் எம்.எல்.ஏ., கோவில் தனி அதிகாரி ஆசிரியர் ராஜசேகரிடம் வழங்கினார்.