சாத்தான்குளம்: கொழுந்தட்டு தூய சவேரியார் ஆலயப்பெருவிழா நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் அருகில் உள்ள கொழுந்தட்டு புதிய மாறு பங்காக அறிவிக்கப்பட்ட பின் நடந்த முதலாவது ஆண்டு தூய சவேரியார் ஆலயப்பெருவிழா 24ம் தேதி காலை பங்குத்தந்தை இல்லம் திறப்பு விழாவுடன் துவங்கியது. திருவிழா கொடியேற்றி பிஷப் இவோன் அம்புரோஸ் திருப்பலி நடத்தினார். தினசரி மறையுரை நற்கருணைஆசீர் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 9ம் திருவிழா மாலை மற்றும் 10ம் திருவிழா இரவு சப்பரபவனி நடந்தது. பெருவிழா திருப்பலி தூத்துக்குடி மறை மாவட்ட தலைமை செயலாளர் அமல்ராஜ் தலைமையில் நடந்தது. அடைக்கலாபுரம் பங்குத்தந்தை ஜஸ்டின் மறையுறை ஆற்றினார். சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு எட்வர்ட்ஜே பங்குத்தந்தையர்கள் கள்ளிகுளம் செல்வரத்தினம், தூத்துக்குடி உபர்ட்டஸ் காவல்கிணறு ஸ்டாலின் தட்டார்மடம் ரத்தனராஜ் செட்டிவிளை பீட்டர்பால், தூத்துக்குடி பெஸ்கி திசையன்விளை பிரிட்டோ கூடங்குளம் வசந்தின் பொத்தக்காலன் விளை பபியான்ஜோசப் நெடுங்குளம் ஸ்தனிஸ்ஜோ ரெமிஜியுஸ் ஆகியோர் மறையுரை வழங்கினர். திருவிழா ஏற்பாடுகளை கொழுந்தட்டு பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் அன்பியங்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.