அசோக வனத்தை துவம்சம் செய்த அனுமனைக் கண்ட அரக்கிகளுக்கு அவரை யாரெனத் தெரியவில்லை. அப்போது கண்டும் காணாதவளாக சீதை கண் மூடியிருந்தாள். அரக்கிகளில் ஒருத்தி, யார் இவன்? என்று கேட்டபோது, யாருக்கு தெரியும்? என்று சொல்லிவிட்டாள். இதைத் தான் ஆபத்து கால தர்மம் என்பர்.