ராஜபாளையம்; ராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் வருஷாபிஷேக நடந்தது. காலை 6:00 மணிக்கு மகா சங்கல்பம், கும்ப ஆவாகனம், பஞ்ச சூத்திர பாராயணம் நடந்தது. காலை 7:00 மணிக்கு சுதர்சன ஹோமம் அதனை தொடர்ந்து பூர்ணா ஹுதி, உற்ஸவ மூர்த்திகளுக்கு அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு வருவாராதனம், சாற்று முறை மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஸ்ரீதேவி பூதேவி அலமேலு மங்கை உடன் வெங்கடேஸ்வர பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.