பதிவு செய்த நாள்
07
டிச
2013
10:12
செஞ்சி: ஆலம்பூண்டி, மங்களாம்பிகை உடனுறை, ஆலகால ஈஸ்வரர் கோவிலில், 6ம் ஆண்டு சம்வஸ்த்ராபிஷேக விழா, டிச 8; நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த, ஆலம்பூண்டியில், 800 ஆண்டுகள் பழமையான, மங்களாம்பிகை உடனுறை, ஆலகால ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருப்பணிகள் செய்து, 2008ல், மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன், 6ம் ஆண்டு, சம்வஸ்த்ராபிஷேக பெருவிழா, டிச 8; நடக்கிறது. இதை முன்னிட்டு, டிச 8; காலை, 7:00 மணிக்கு, மூலவர், அம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம், வேதபாராயணம், கோபூஜை, கலச பூஜை, சங்கு பூஜை, ஹோமங்கள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, கிராம மக்களும், விழா குழுவினரும் செய்துள்ளனர்.