பதிவு செய்த நாள்
10
டிச
2013
04:12
பிறர் நலமும் விரும்பும் தனுசு ராசி அன்பர்களே!
ராசிநாதன் குரு தற்போது 7ம் இடமான மிதுனத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபங்களையும் தருவார்.சுக்கிரன் 2ம் இடமான மகரத்தில் இருப்பதால் பொருளாதார வளம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். மேலும் சனி, ராகு 11ம் இடமான துலாம் ராசியில் இருந்து நன்மை தருவார்கள். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். மற்றைறய கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் பாதகம் இல்லை.புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் குடும்பத்தில் கடந்த மாதத்தில் இருந்தது போன்ற குதூகலம் இருக்காது. வீட்டினுள் சில பிரச்னைகளும், உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடும் வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். அண்டை வீட்டாரால் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்பு உண்டு. உடல் நலம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். டிச.25,26ல் எதிர் பாராத நன்மை கிடைக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். ஆனால், ஜன.2க்கு பிறகு அவப்பெயர் வரலாம். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே, அதிகாரம் செய்வதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீண் கவலை வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில், வியாபார விஷயத்தில் பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். நஷ்டம் தவிர்க்கப்படும். எதிர் பாராத வகையில் பணவரவு இருக்கும். போட்டியாளர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். கலைஞர்களுக்கு புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரை மூலம் முன்னேற வழி காண வேண்டும். விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் பெறலாம். பெண்கள் சிறப்படைவார்கள். புத்தாடை, நகை வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரலாம்.
அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: வெள்ளை, மஞ்சள்
நல்லநாள்: டிச.16,17,18,19, 25,26,27,28, ஜன.1,2, 5,6, 11,12,13.
கவன நாள்: 5,6 சந்திராஷ்டமம்.
வழிபாடு: காளி வழிபாடு மன தைரியத்தை கொடுக்கும். தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள்.