பதிவு செய்த நாள்
10
டிச
2013
04:12
நினைத்ததை சாதிக்கத் துடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
ராசி நாயகன் செவ்வாய் 11ம் இடத்தில் இருந்து காரிய அனுகூலத்தை ஏற்படுத்துவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் நன்மை தருவார். அவர் 3ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பொறுமையும் நிதானமும் தேவை. புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண்விவாதங்களை தவிர்க்கவும். வீட்டில் பிரச்னை வரலாம். கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியினரிடையே அன்பு மேலோங்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல்நலம்சிறப்படையும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கோரிக்கைகள் நிறை வேறும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ற லாபத்தை காணலாம். ஜன.2க்கு பிறகு போட்டியாளர்களால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல் வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெறலாம். சமூக நல சேவகர்களின் எண்ணங்கள் ஈடேறும். மாணவர்கள் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தவும். விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம்.வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம். பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். நகை, வாங்கலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். சூரியனால் கண் தொடர்பான உபாதை வரலாம். சிலருக்கு வேறு வகையில் மருத்துவச் செலவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: வெள்ளை, சிவப்பு
நல்ல நாள்: ,2,7,8,9,10,11, 14,15,16,19,20,25,26,27,28,29.
கவனநாள்: 3,4 சந்திராஷ்டமம்.
வழிபாடு: தட்சிணாமூர்த்தியையும், ராகுவையும், வணங்கி வாருங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.