பதிவு செய்த நாள்
10
டிச
2013
04:12
செயல் ஆர்வம் மிக்க மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பதால் பெண்களால் சுகம் கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். கல்விக்காரகன் புதன் ராசிக்கு 12-ல் இருப்பதால் எதிரி தொல்லை வரலாம். முயற்சியில் தோல்வியை சந்திக்கும் நிலை உருவாகலாம். உடல் நலனில் அக்கறை தேவை. ஜன.2 இடம் மாறி உங்கள் ராசிக்கு வருகிறார். அவரால் வீட்டில் பிரச்னை வரலாம். அக்கம்பக்கத்தினருடன் கருத்துவேறுபாடு வரலாம். பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் செயல் நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். சனி 10-ல் நின்று அவப்பெயரை தருவார். பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். தம்பதியிடையே அன்பு மலரும். பெண்களால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நன்மை ஏற்படும். பணியாளர்களுக்கு பணியில் அக்கறை அவசியம். இருந்தாலும், நல்ல பலனை எதிர்நோக்கலாம். சிலர் பதவி, சம்பள உயர்வு கிடைக்க பெறுவர். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பெண்கள் கை ஓங்கி நிற்கும். அவர்கள் மூலம் எதையும் தொடங்கினால், சிறப்பாக இருக்கும். சூரியனால் பொருள் விரயம் ஏற்படும். புதிய முதலீட்டு விஷயத்தில் கவனம் தேவை. கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமான நிலையில் காணப்படுவதால் நல்ல வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர்.மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். நல்ல மதிப்பெண் கிடைக்க பெறுவர். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை பெறுவர். நெல், கோதுமை சோளம் மற்றும் பழ வகைகள் மூலம் அதிக லாபத்தை காண்பர். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது.பெண்கள் மகிழ்ச்சியாக காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து பொருள் கிடைக்கும். கணவர், குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். மாத பிற்பகுதியில் கணவன் மனைவி இடையே பிணக்கு வரலாம். விட்டுக் கொடுப்பது நல்லது. உடல் நலம் சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: வெள்ளை, நீலம்
நல்ல நாள்: டிச.18,19,20,21,27,28,29,30,31, ஜன.3,4,7,8
கவன நாள்: டிச.22,23,24. சந்திராஷ்டமம்.
வழிபாடு: நரசிம்மர் வழிபாடு நன்மையளிக்கும். சனிக்கிழமை சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்யலாம்.