கார்த்திகை கடைசி சோமவாரம்: பக்தர்கள் சுவாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2013 05:12
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் மற்றும் விளமல் மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர கோவிலில் நேற்று நடந்த கார்த்திகை கடைசி சோம வாரத்தில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் தியாகராஜர்கோவில் சர்வபரிகாலத்தலமாக இருப்பதால் பக்தர் கள் தினசரி அதிகளவில் வந்து செல்கின்றனர். நேற்று முன் தினம் கார்த்திகை சோமவாரத்தில் தியாகராஜர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்கா ரத்தில் அருள்பாலித்தார். இதேபோன்று விளமல் மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்து. இதில் திருவாரூர் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம் செய்தனர்.