பதிவு செய்த நாள்
10
டிச
2013
05:12
மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனத்தில் நடந்த 23 வது குருமூர்த்திகளின் முதலாம் ஆ ண்டு குருபூஜை விழாவில் ஓதுவார், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டது. நாகை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனம் 23 வது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 1983 ம் ஆண் டு ஏப்ரல் 7ம் தேதி முதல் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி வரை ஞானபீடத்தில் அருளாட்சி புரிந்தார். அவர் காலத்தில் சைவ சித்தாந்த பயிற்சி மையங்கள், திருமுறை பயிற்சி மையங்கள், பல கோயில்கள் கும்பாபிஷேகம், ஓதுவார்கள், தமிழறிஞர்கள் க வுரவித்தல், பல பகுதிகளில் அன்னதானம் என தமது அருளாட்சி காலத்தில் பல சமுதாய பணிகளை செய்தார். ஆதீனம் சார்பில் ஆங்கிலவழி பள்ளிகளையும் நிறுவினார். கார்த்திகை சதயமான நேற்று முன்தினம் இவரது முதலாம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதனை முன்னிட்டு ஆதீன மறைஞான தபோவனத்தில் உ ள்ள 23 வது குருமூர்த்திகளின் குருமூர்த்தத்தில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சா ரிய சுவாமிகள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்.
மாலை ஆதீன கொலு மண்டபத்தில் நடந்த சமய விரிவுரை நிகழ்ச்சியில் ம யிலாடுதுறை பாலசந்திரஓதுவார் திருமுறை பாடினார். ஆதீனம் ஸ்ரீமத் சுப்பி ரமணிய தம்பிரான்சுவாமிகள் வரவேற்றார். சென்னை பிரபாகர மூர்த்தி உய்ய வகுத்த குருநெறி எனும் தலைப்பிலும், சுப்பையா தொல்காப்பியத்தில் சிவ நெறிச் சிந்தனைகள் எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். ஆதீனப்புல வர் குஞ்சிதபாதம் நன்றி கூறினார். இரவு பூஜை நிறைவில் விழா மலர்களாக விநாயகர் தோத்திர திரட்டு, 23வது குருமூர்த்திகளின் அருள்வரலாறு எனும் நூல்கள் வெளியிடப்பட்டது. தொ டர்ந்து பாலசந்திர ஓதுவாருக்கு திருமுறை இசைக்கலாநிதி எனும் விருதும்,த ங்க மோதிரமும், தமிழறிஞர்கள் சுப்பையாவிற்கு சிவஞான கலாநிதி எனும் விருதும், சென்னை பிரபாகர மூர்த்திக்கு சிவத்தமிழ்ச் செம்மல் எனும் விருது ம், தலா ரூ 5 ஆயிரம் பொற்கிழியும் ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சூரியனார்கோயில் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கதேசிக பரமாச்சாரியசுவாமிகள், செங்கோல் ஆதீனம் குரு மகாசன்னிதானம், ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், சைவ சித்தாந்த பேராசிரிய ர்கள், ஆதீனப் புலவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.