திருமலை - திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் புகழ்பெற்ற கபிலேஸ்வரர் சிவன் கோயிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்தஆண்டு விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல்நாள் வெள்ளிக்கிழமை விநாயகர் தெப்போற்சவமும், இரண்டாம் நாள் சனிக்கிழமை சுப்பிரமணியர் தெப்போற்சவமும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு காமாட்சியம்மன் சமேத சந்திரசேகரர் தெப்போற்சவம் நடைபெறும். இதைத் தொடர்ந்து வரும் புதன்கிழமை (டிசம்பர் 18) ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி சிவகாமி அம்மன் சமேத நடராஜர் திருவீதியுலா நடைபெற உள்ளது.