பதிவு செய்த நாள்
12
டிச
2013
03:12
வாலாஜாபாத்: தாங்கி சிந்தாமணி வழித்துணை விநாயகர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, தாங்கி கிராமத்தில், சிந்தாமணி வழித்துணை விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, கம்பர், நிகர்த்தவல்லி, சரஸ்வதி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 10:00 மணி அளவில் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் கணபதி ஹோமமும், மாலை 6:00 மணி அளவில், முதல் காலபூஜையும், நேற்று காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், மாலை 4:00 மணிக்கு மூன்றாம் காலபூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று காலை 7:00மணிக்கு, நான்காம் காலபூஜையும் அதைதொடர்ந்து, 9:45 மணி முதல் 10:00 மணி அளவில், மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.