பதிவு செய்த நாள்
13
டிச
2013
10:12
பழநி: பக்தர்களின் வசதிக்காக பழநியிலிருந்து சபரிமலைக்கு, கேரள அரசு போக்குவரத்து கழகம், கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. கார்த்திகை, மார்கழி மாதங்களில், சபரிமலை செல்லும் பக்தர்கள் பழநிக்கு அதிகளவில் வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும், கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பழநி- பம்பைக்கு இரண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் பழநியிலிருந்து பெரியகுளம், தேனி, கம்பம், குமுளி வழி எரிமேலி, பம்பை வரை செல்கிறது. தற்போது, கூடுதலாக ஆறு சிறப்பு பஸ்கள், மாலை 6 மணி முதல் இயக்கப்படுகின்றன. இவை, இருக்கைகள் நிரம்பியவுடன் புறப்பட்டு, பம்பைக்கு 9 மணி நேரத்தில் சென்றடையும். பழநி-பம்பை வரை 224 ரூபாய்; எரிமேலி வரை 182 ரூபாய்; எரிமேலி-பம்பைக்கு 50 ரூபாய், கட்டணம்.இதைப்போல, பம்பையிலிருந்தும் பழநிக்கு காலை, மாலையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.