தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, இறுதியாக வெண்ணிற ஆடை யுடன் அமிர்த கலசத்தை ஏந்தியபடி விஷ்ணு தன்வந்திரியாக எழுந்தருளினார். விஷ்ணுவே இவ்வாறு வந்தார். இவருடைய கையில் அட்டைப்பூச்சி இருக்கும். இதற்கு ஜலவ்கா என்று பெயர். கிருமிகள் உடலிலுள்ள ரத்தத்தில் கலந்து நோயைப் பரப்புகின்றன. அட்டையை உடலில் விட்டால் ரத்தத்தை உறிஞ்சிவிடும். பிறகு புதுரத்தம் பாய்ச்சலாம். ரத்தத்திலுள்ள தோஷத்தைப் போக்கவே இந்தப் பூச்சியை அவர் கையில் ஏந்தியிருக்கிறார். ஆரோக்கியம் அருள்பவரான தன்வந்திரியை பத்மபுராணம் வைத்திய ராஜா என போற்றுகிறது.