தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடந்த போது, எழுந்த விஷத்தின் நச்சுத்தன்மை எங்கும் பரவியது. தேவர்கள் சிவபெருமானைச் சரணடைந்தனர். கருணைக்கடலான இறைவன் அதை ஏற்றார். தன் அருகில் நின்ற சுந்தரரை அழைத்து, விஷத்தை ஒன்றுசேர்க்க கட்டளையிட்டார். அவர் அதை நாவல்கனி வடிவத்துக்கு உருட்டி சிவனிடம் கொடுத்தார். சிவன் அதை விழுங்கி விட்டார். சுந்தரர் நிகழ்த்திய அற்புதத்தைக் கண்ட தேவர்கள் ஆலால சுந்தரா! அற்புத சுந்தரா! என அழைத்தனர். ஆலாலம் என்றால் விஷம்.