பதிவு செய்த நாள்
17
டிச
2013
11:12
மறையுரையாற்றுவது என்பது எல்லோருக்கும் எளிதானதல்ல. சிலருக்கே அது வசப்படும். பேச்சில் தெளிவு, உச்சரிப்பில் ஏற்ற இறக்கம், குரலில் கம்பீரத்துடன், சொல்ல வந்த கருத்தை பிறர் ஏற்றுக்கொள்ளும் வகையில் வலியுறுத்தினால்தான் அது அடுத்தவர்கள் மனதில் மாற்றத்தையும், திறனாய்விற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தும். மீட்பின் ரட்சகராக கருதப்பட்ட இயேசுவும், இதே பாணியைத்தான் தன்னை பின் தொடர்ந்தவர்களிடம் கடைபிடித்தார். எதை சொல்வதாக இருந்தாலும் அதற்கொரு உவமையை கூறி அதன் மூலமாக, தான் சொல்ல வந்த கருத்தை அனைவரும் உணருமாறு செய்தார். ஒவ்வொரு போதனையிலும் இதை கவனித்து வந்த சீடர்கள் "இயேசுவிடம், ""ஏன் எல்லா நேரங்களிலும் உவமையிலேயே பேசுகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இயேசு, ""விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறது. அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கின்றனர். எனவேதான், அவர்களிடம் உவமைகள் வாயிலாக பேசுகிறேன், என்றார். இயேசுவின் சீடர்களைப்போன்று, விண்ணரசின் மறைபொருளை நாம் அறிந்து கொண்டுள்ளோமா அல்லது கண்ணிருந்தும் குருடர்களாக திகழ்கிறோமா என எண்ணிப்பார்ப்போம்.