ஆனைமலை: தென்சங்கம்பாளையத்தில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில், ஸ்ரீலஸ்ரீ மகாகுரு அழுக்குசுவாமிகளின் குருபூஜையும், வள்ளலாரின் ஜெயந்தி விழாவும், தேவகான இசை ஆராதனை விழா என முப்பெரும் விழா நடந்தது. இதில் நேற்று காலை 7:00 மணிக்கு, சித்தர்கள் வெள்ளி அபிஷேகமும், அருட்பெரும் ஜோதி அகவல் பாராயணம், கஞ்சி வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் இசை ஆராதனை நிகழ்ச்சியும், மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தர் சேவை மையமும், பொதுமக்களும் செய்திருந்தனர்.