ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, நேற்று இரவு பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுவிழா நடந்தது.வருடாந்திர பொங்கல் விழாவை முன்னிட்டு, டிச., 24ல் தீர்த்தம் எடுத்தல் நிகழ்ச்சியும், டிச., 25ம் தேதி காலை மாவிளக்கு எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அடுத்து, 26ம் தேதி காலை கம்பம் பிடுங்குதல், அம்மனுக்கு மலர் பல்லாக்கு ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் விமரிசையாக நடக்க உள்ளது. சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்க, விழாக்குழுவினர் அழைப்பு விடுத்தனர்.