பொதுவாக சாஸ்தா குத்துக்காலிட்ட ஆசனத்தில் அமர்ந்திருப்பார். ஆனால், வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 5 கி.மீ., தொலைவிலுள்ள பாகசாலை கல்யாணி அம்மன் கோயிலில் உள்ள அய்யனார் பூரண புஷ்கலாவுடன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். இவரது கையில் வேலாயுதமும் உள்ளது. நின்ற நிலையில் போர்க்கோலம் பூண்டிருப்பதாக இதனைக் குறிப்பிடுவர்.