பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் திருமணம் நடந்த திருமணத் தலங்களில் விஷ்ணுவே தாரை வார்த்து கொடுப்பவராக இருப்பார். ஆனால், திருமணஞ்சேரியில் பரத்வாஜ முனிவர் அம்பிகையை சிவனுக்கு தாரை வார்த்து கொடுக்கிறார். ஏனெனில், இத்தலத்தில் பரத்வாஜ முனிவரின் மகளாக அம்பிகை அவதரித்தாள். விஷ்ணு அருகிலிருந்து ஆசீர்வாதம் செய்கிறார். இந்த அதிசய அமைப்பை மற்ற தலங்களில் காண இயலாது.