கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் மற்றும் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் ஆகியவை பழநி தேவஸ்தானத்திற்கு உட்பட்டவை. இக்கோயில்களின் உண்டியல்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை திறக்கப்பட்டு, எண்ணப்படும். பழநி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களால் எண்ணப்பட்டது. இதில் குறிஞ்சி ஆண்டவர் கோயில் உண்டியலில் பக்தர்கள் அளித்த காணிக்கையாக 5 லட்சத்து 82 ஆயிரத்து 769 ரூபாய், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் உண்டியலில் ரூ. 3 லட்சத்து 48 ஆயிரத்து 61 ரூபாயும் இருந்ததாக கோயில் அர்ச்சகர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.