தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் திருவாதிரை அன்று சுமங்கலிகள் மாங்கல்ய விரதம் இருந்து வழிபட்டனர். மார்கழியில் திருவாதிரை நட்சத்திர அன்று சுமங்கலிகள் மாங்கல்ய பலத்திற்கு விரதம் இருந்து வருவது வழக்கம். இதில் சுமங்கலிகள் புதிய ஆடை உடுத்தி, பூஜையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பூக்கள், மஞ்சள் கிழங்கு படையல் படைத்து சுவாமி வழிபாடு நடத்தினர். பின் பெரியோர்கள் ஆசீர்வாதம் பெறுவது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஆடலூர், பன்றிமலை, பாச்சலூர், தாண்டிக்குடி பகுதியில் திருவாதிரை வழிபாடு நடந்தது. கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.