மொடக்குறிச்சி செல்லாத்தாபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2013 11:12
மொடக்குறிச்சி அருகே செல்லாத்தாபாளையத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. வியாழக்கிழமை இரவு கம்பம் போடுதல், பூவோடு வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமையிலிருந்து திரளான பக்தர்கள் கம்பத்திற்குத் தண்ணீர் ஊற்றி, வழிபட்டு வருகின்றனர். தினமும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெறுகின்றன.