பதிவு செய்த நாள்
23
டிச
2013
11:12
தென்காசி: தென்காசியில் ஐயப்பன் ரதவீதியுலா கோலாகலமாக நடந்தது. தென்காசியில் ஐயன் ஐயப்ப ரத வீதியுலா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 38வது ஆண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை சுமார் 6 மணியளவில் தென்காசி மேலச்சங்கரன் கோவிலில் இருந்து ஐயப்பன் ரதம் புறப்பட்டு பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு, கூளக்கடை பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. நிகழ்ச்சியில் தலைவர் மாரிமுத்து குருசாமி, அமைப்பு செயலாளர் மாடசாமி ஜோதிடர், கவுரவ தலைவர் ராமன் குருசாமி, செயலாளர் தங்கவேலு குருசாமி, தங்கவேல், துணை தலைவர்கள் முருகன், அழகிரி, துணை செயலாளர்கள் சங்கரன், திருநாவுக்கரசு, கவுரவ ஆலோசகர்கள் மணி, சுப்பையா, நடராஜன், சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஐயப்பன் ரதத்திற்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.