குற்றாலம்: குற்றாலத்தில் அகஸ்தியர் பிறந்த ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு திருஞானசம்பந்தர் வழிபாடு நடந்தது. குற்றாலநாதர், குழல்வாய்மொழியம்பாளுக்கு சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. பொதிகை குற்றாலம் அகஸ்தியர் அன்னதான கமிட்டி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் அகஸ்தியரை வழிபட்டு சென்றவண்ணம் இருந்தனர்.