பதிவு செய்த நாள்
23
டிச
2013
11:12
கோவில்பட்டி: கோவில்பட்டி தூய வளனார் தேவால யத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடந்தது. கோவில்பட்டி தூய வளனார் தேவாலய புனித வின்சென்ட் தேபவுல் சபை சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சபை தலைவர் ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். உறுப்பினர் நந்தினி வரவேற்றார். பங்குத் தந்தை பீட்டர், உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் ஆசி வழங்கி புத்தாடைகள், உணவு பொருட்கள், நிதியுதவி வழங்கி பேசினர். இதில் சுமார் 70 பேருக்கு கிறிஸ்துமஸ் உதவி வழங்கப்பட்டது. கவுன்சிலர் ஏஞ்சலா நன்றி கூறினார். விழாவில் வேளாங்கன்னி, ஜெபமாலை பிச்சை, சபை மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ், நற்செய்திக்குழு உறுப்பினர் சவுந்தர், ஜாண், சபை உறுப்பினர்கள் இன்னாசி, பொருளாளர் மரியஜோசப், ஏசுதாசன், பெண்கள் சபை தலைவி ஜமுனா, இன்னாசியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.